முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 5 மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக மருத்துவம் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘26 ஆயிரம் முகாம்கள் மூலம் 50 ஆயிரம் இடங்களில் இன்று நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 8,36,796 பேர் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

3,36,468 பேர் இன்று முதல் தவனை தடுப்பூசியும் 5,00,328 பேர் இன்று இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6,43,91,902 பேர் தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை தெரிவித்து நிறுவனங்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.

காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வரை 450 ஆக இருந்த டெங்கு பாதிப்பு 532 ஆக உயர்ந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Dengue fever, Ma subramanian