• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டெல்டா பிளஸ் கொரோனாதான் மூன்றாவது அலையாக உருவாக வாய்ப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

டெல்டா பிளஸ் கொரோனாதான் மூன்றாவது அலையாக உருவாக வாய்ப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என்று கூறப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    டெல்டா பிளஸ் கொரோனா பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதால் அப்பகுதியை கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும், மேலும் இவ்வைரஸ் குறித்து ஆய்வு செய்ய ஏதுவாக 25 நாட்களுக்குள் சென்னையில் பரிசோதனை மையம் தொடங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ம.பொ.சிவஞானம் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மயிலை வேலு, பிரபாகர் ராஜா, எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மா.சுப்ரமணியன்


    அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள டெல்டா பிளஸ் வைரஸ் முடிவுகள் மே மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட பகுப்பாய்வின் முடிவுகள் படி 9 பேரின் வீடுகள் மற்றும் வசிக்கும் பகுதிகள் தொடர்புகளை சோதனை செய்யப்பட்டது என்றார்.

    மேலும், டெல்டா பிளஸ் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கூறிய அமைச்சர், ஆனால் இந்து வகை வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என கூறப்படுகிறது என்றும் கூறினார். இந்நிலையில் உருமாற்றமடையும் வைரஸ்கள் குறித்து கண்டறிய சென்னையில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றும், கொரோனா உச்சம் குறைந்துள்ள நிலையில் பொது நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளில் கவனம் செலுத்த மருத்துவமனை முதல்வர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

    டெல்டா பிளஸ் பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், இதற்கான பரிசோதனை மையம் சென்னையிலேயே அமைக்க முடிவு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், 25 நாட்களுக்குள் பரிசோதனை மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    டெல்டா பிளஸ் தொற்று பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர். எனவே அந்த பகுதியை கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மீண்டும் யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மூன்றாவது அலைக்கு தயாராகும் விதமாக 2-வது அலையில் உருவாக்கப்பட்ட படுக்கைகள் கட்டமைப்பு அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து செயல்படும் என்றார். மேலும், பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என்றும், தற்போது சேர்க்கைக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்க கூடிய நிலையில் 5ம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: