• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை- அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை- அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் 60 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தீக்காயம் ஏற்படுவோருக்கு 12 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டு தயார் நிலையில் உள்ளது. அதை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை கவனமாக கையாள வேண்டும் என்று விழிப்புணர்வு மருத்துவத்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் இருக்கிற மாவட்ட மருத்துவமனைகளில் பிரத்யேக தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    2019ல் 242 பேர், 2020ல் 154 பேர் பட்டாசு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2017ல் 55, 2018ல் 25 பேர், 2019ல் 55 பேர், 2020ல் 9 பேர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பட்டாசு தீ விபத்துக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 22 படுக்கைகள் தீக்காய சிகிச்சைக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் பேர் இராண்டாவது டோஸ் உரிய நேரத்தில் செலுத்தவில்லை. நவம்பர் இறுதிக்குள் முதல் டோஸ் 100% செலுத்த இலக்கு நிர்ணயித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தவில்லை. டெங்கு பாதிப்புக்கான மத்திய குழு குறித்து ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டோம். 11 மருத்துவக் கல்லூரிகளில் 1,450 மருத்துவ இடங்கள் இந்த ஆண்டு தமிழகத்துக்கு உறுதியாக உள்ளன’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: