தமிழகத்தில் 256 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு: தடுப்பதற்கு வல்லுநர்களுடன் ஆலோசனை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 256 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘மூன்றாம் அலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் விரைவில் அமைக்கப்படும். 256 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி கருப்பு பூஞ்சை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபடும்..விரைவில் தீர்வு காணப்படும்.

  ஜூன் 6-ம் தேதி இந்த டெண்டர் திறக்கப்பட்டு விரைவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரானா தொற்று மரணங்கள் மறைக்கப்படவில்லை. ஒரு இறப்பைக் கூட மறைக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறைக்கப்படுவதாக கூறுவது தவறான தகவல். மாவட்டக் கட்டுப்பாட்டு அறை மூலமாக கிராமப்புறத்தில் தொற்று குறித்து கண்காணிக்கப்படுகிறது. 2,800-க்கும் மேற்பட்டோர் நெல்லையில் நேற்று மட்டும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

  தமிழகத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்கும் பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளாவிய அளவில் டெண்டர் கேட்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: