Home /News /tamil-nadu /

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு : 'புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்ரமணியன்

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு : 'புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை' - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

100 ஆண்டு பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையை 200 படுக்கை கொண்ட 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்து புதிய அரசாணை வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது, ‘அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசாணை 354 மற்றும் அரசாணை 293 உள்ளன.

இரண்டு அரசாணைகளையும் சேர்த்து புதிய அரசாணை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 100 ஆண்டு பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையை 200 படுக்கை கொண்ட 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.

கிண்டியில் 60 வயது கடந்த மூத்தோருக்கான மருத்துவமனை அமைக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிண்டியில் அறிவிக்கப்பட்ட 230 கோடி ரூபாய் மதிப்பிலான பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டிட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

ALSO READ | செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கியவர் முதல்வர் ஸ்டாலின் - லியோனி சர்ச்சை பேச்சு

மேலும் கடலூரில் போலி மருத்துவர் சிகிச்சை கொடுத்து 5 வயது குழந்தை இறப்பு தொடர்பாக, மினி கிளினிக் இருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர், குழந்தைகளுக்கான மருத்துவ சேவை அம்மா கிளினிக்கில் இருந்ததா? ஓராண்டுக்கான பணி என்று எழுதி வாங்கி கொண்டு தான் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

போலி மருத்துவர் மற்றொரு மருத்துவரின் சான்றிதழ்களை கொண்டு ஐந்து வருடங்களாக செயல்பட்டு வந்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Ma subramanian

அடுத்த செய்தி