விரும்பிய தேதியில் சிசேரியன் பிரசவங்கள் தவிர்க்க வேண்டும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் கருத்துக்கு பலரும் ஆதரவு

அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஜோதிடத்தின் அடிப்படையில் சிசேரியன் பிரசவங்களை செய்வது மிகவும் தவறானது என்ற கருத்தையே மருத்துவர்களும் முன்வைக்கின்றனர்

 • Share this:
  விரும்பிய தேதியில் சிசேரியன் பிரசவங்கள் செய்யப்படுவதை மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜோதிடத்தின் அடிப்படையில் சிசேரியன் பிரசவங்களை செய்வது மிகவும் தவறானது என்ற கருத்தையே மருத்துவர்களும் முன்வைக்கின்றனர்

  விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்து குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து விட்டதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறிய அமைச்சரின் கருத்துக்கு, பெண்ணியவாதிகள் உட்பட பலரும் வெவ்வேறு விதமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

  ALSO READ |  உடற்பயிற்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - வைரலான வீடியோ

  மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் சுகப் பிரசவமா? சிசேரியனா? என்பதை முடிவு செய்வதில் தாய்க்கும் உரிமை இருக்கிறது என்ற கருத்துகளும் எழுந்துள்ளன. அதே நேரம் ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் சிசேரியன் செய்வது ஏற்புடையது அல்ல என கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

  இந்தியா போன்ற ஜோதிடத்தை விரும்பும் நாடுகளில், எத்தனை சிசேரியன் பிரசவங்கள், ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் நடக்கிறது என்ற புள்ளி விவரங்கள் இல்லை என்று கூறுகிறார் மருத்துவ செயற்பாட்டாளர் சாந்தி. அதேநேரம் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், குறிப்பிட்ட நாளில் சிசேரியன் செய்ய சொல்லி வற்புறுத்துவதை, மறுப்பதற்கு இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

  ALSO READ |  8 பிள்ளை பெத்து என்ன?.. கஞ்சி ஊத்த ஆள் இல்ல - கோட்டாச்சியரிடம் கண்ணீர் விட்ட 94 வயது மூதாட்டி

  ஜோதிடத்தின் அடிப்படையில் குழந்தை பிறப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெற்றோரும், அவர்களை சார்ந்தவர்களும் மாற்றிக் கொண்டால் மட்டுமே, ஜோதிட ரீதியிலான சிசேரியன் பிரசவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா. இதனிடையே, சிசேரியன் பிரசவங்களுக்கு எழுதப்படும் ஜாதகம் ஒருபோதும் துல்லியமாக இருக்காது என்று கூறுகிறார் கோவையை சேர்ந்த ஜோதிடர் முருகேசன்.

  இந்தியாவில் மொத்த பிரசவங்களில் 10 சதவிகிதம் சிசேரியன் பிரசவங்களாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், தேசிய சுகாதார புள்ளியியல் துறை நடத்திய ஆய்வின் படி 2017-18ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 30 சதவிகிதம் சிசேரியன் பிரசவங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: