கன்னியாகுமரியில் களியாக்காவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கள் இல்லையென குற்றம்சாட்டி அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையம் களியக்காவிளை அருகே செம்மாம்விளை பகுதியில் செயல்பட்டுவருகிறது. கடந்த 1958ஆம் ஆண்டு அமைக்கபட்ட இந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதேசம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடங்களை பார்த்து அதிர்ச்சியடைத்தார். இதையடுத்து இது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர், உடனடியாக பழைய கட்டிடங்களை இடிக்கும்படி உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அங்கே போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துக்கள் இல்லையென குற்றம்சாட்டினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாழடைந்த கட்டிடங்கள் உடனடியாக அப்புறபடுத்தபடும் எனவும் தேவையான கட்டமைப்புகள் உடனடியாக ஏற்படுத்தபடும் எனவும் தேவையான மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கபட்டு விரைவில் சிறப்பாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.
Must Read : மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு... மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்!
இந்த ஆய்வின் போது கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மாவட்ட சுகாதாரபணிகள் இணை இயக்குனர் மீனாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Ma subramanian