கோவில்களில் அதிகம் கூட்டம் கூடுவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

மா.சுப்ரமணியன்

கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்படாதது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  கோவில்களில் அதிகளவில் கூட்டம் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவே அதற்கான கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  சிவகங்கையை அடுத்துள்ள மதகுபட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் சூழலில் அதன் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பயனாளிகளிடம் சேவை குறித்து கேட்டறிந்த அவர் அதன்பின் ஒக்கூரில் உள்ள வாழ்வு மையத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் பிசியோ தெரபி சிகிச்சை குறித்தும் பார்வையிட்டார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கோவில்களில் ஆடி மாதம் என்பதால் கூட்டம் அதிகளவில் கூடுகிறது. அதனை கட்டுப்படுத்த இயலாததால் தொற்று பரவுவதாக சுகாதார துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கோவில்களுக்கான தடை நீடிக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்ததுடன் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான ஊசி கொள்முதல் செய்வது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டபின் தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்ததுடன் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதனால் பள்ளிகளில் தொற்று பரவாது என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வு பணியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் ஏராளமான சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
  Published by:Karthick S
  First published: