Home /News /tamil-nadu /

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடும் சோதனை- அமைச்சர் மா.சுப்ரமணியன்

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடும் சோதனை- அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மாவட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி, மதுரை, சென்னை, கோவை ஆகிய நான்கு மாவட்ட விமான நிலையத்திற்க்கு வெளிநாட்டிலிருந்து வரும்
    எல்லா பயணிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து இரண்டு விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறது. சென்னையை காட்டிலும் கூடுதலாக அதிக பயணிகள் 14 நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார்கள். 663 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதில் எல்லோருக்கும் நெகட்டிவ் வந்துள்ளது.

    663 பயணங்களின் விலாசங்கள் சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்பு, வருவாய் துறை போன்ற பல்வேறு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரு வார காலத்திற்கு தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளி நடமாட்டங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    இவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, நகராட்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழு நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு மீண்டும் சோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் வந்த பிறகு அவர்கள் வெளியில் நடமாடலாம். நான்கு விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் சோதனை செய்து முடிவு வந்தவுடன் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

    8 சதவீதம் பேருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம். அவர்களுக்கு அரசு சார்பில் ஆர் டி பி சி ஆர் சோதனைகள் கட்டணம் செலுத்தி செய்ய உள்ளோம். வரும் பயணிகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அவர்களிடம் பணம் வசூலிக்காமல் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படும். யாருக்காவது பாசிட்டிவ் என கண்டறியப்பட்டால் ஏற்கனவே இருக்கிற கொரோனா வார்டில் அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கென்று தனி பிரத்தியேக வார்டு அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்க வேண்டும்.

    தீவிரமாக கண்காணித்தால் மட்டுமே பரவலை தடுக்க முடியும். கோவை, சென்னை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வார்டுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒமைக்கிரான் வைரஸ் வேகமாக அதிக வீரிய தன்மையுடன் பரவக்கூடியது. ஒவ்வொரு பயணிகளிடம் பக்குவமா எடுத்து கூறி ஆர்டிபிசிஆர் சோதனை செய்து கொண்டு காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். சென்னை, கோவை, மதுரை யை விட திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    ஆர்டிபிசிஆர் சோதனை திருச்சியில்தான் குறைந்த நேரத்தில் செய்து முடிவுகள் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 6 மாவட்டங்கள் தடுப்பூசி போடப்படாமல் பின் தங்கியிருக்கிறது. வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர், மதுரை, மயிலாடுதுறை இரண்டாவது தடுப்பூசி போடுவதில் சுணக்கம் இருக்கிறது. இதற்கு தன்னார்வலர்கள் உள்ளிட்டோரை கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தடுப்பூசி போடாமல் சான்றிதழ் வாங்கியவர்கள் யார் சான்றிதழ் கொடுத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்டிபிசிஆர் சோதனையில் 700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

    நேற்று 900 ரூபாய் வாங்கிக்கொண்டு ரசீது தரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இனிமேல் அதற்கு ரசீது வழங்கப்படும்.கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதி எங்கும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு விமான நிலையத்தில் கூறியுள்ளது போன்று ஆர்டிபிசிஆர் சோதனை செய்த பின்பே நெகட்டிவ் என்ற வந்த உடனே வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறப்படுள்ளது. இது ஓமைகானை தடுக்கும் முயற்சி தான். வீடியோ காலில் இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். நீட்டில் 1,500 சீட்டு கூடுதலாக வந்துள்ளது. இந்த தடவை கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு கிடைக்கிறது’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி