ராஜன் குழு அறிக்கைக்குப் பிறகு நீட் குறித்து முதல்வர் முடிவு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் தேர்வு குறித்து நீதிபதி ராஜன் குழு அறிக்கை அளித்தபிறகு முதல்வர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழக அரசின் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு நிவாரணம் 2,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2,09,81,900 அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 8,392.76 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

ரேசன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு நிவாரணம் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கு வரிசையில் நிற்கும் போது முன்னுரிமை வழங்கப்படும்.

கொரோனா இறப்பு விசயத்தில் ஐசிஎம்ஆர் விதிகளின்படி இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான வழிகாட்டு நெறிமுறையே பின்பற்றப்படுகிறது. பெற்றோர்கள் கொரோனாவால்  குணமடைந்து இணை நோயால்  இறந்திருந்தாலும் அவர்களின் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு முறையில் உதவி செய்ய மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி வருகிறோம்.

நீட் தேர்வு குறித்து ஒரு மாதத்திற்குள் ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிக்கும். அறிக்கையினை பெற்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தற்போது 1,100-ஐ கடந்துள்ளது. இந்த நோயை குணப்படுத்துவதற்காக மூன்று மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. கரும் பூஞ்சையை கட்டுப்படுத்துவது குறித்து 13 மருத்துவ வல்லுநர் குழு ஆராய்ந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், எந்தெந்த மருந்துகள் கொடுத்தால் குணப்படுத்த முடியும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவர்களது அறிக்கை விரைவில் பெறப்படும். கருப்பு பூஞ்சை 150 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வியாதி’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: