சித்த மருத்துவ கட்டளை மையத்தை திறந்துவைத்து யோகா செய்து அசத்திய அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

சென்னையில் சித்த மருத்துவத்துக்கான கட்டளை மையத்தை திறந்துவைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன் யோகா செய்து அசத்தினார்.

  • Share this:
தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கம் அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் சிறிது நேரம் யோகா பயிற்சியில் ஈடுபட்டு மருத்துவர்களின் கைத்தட்டலைப் பெற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், ‘தமிழகத்தில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள் 11, ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் 2, யுனானி சிகிச்சை மையம் 1, ஹோமியோபதி சிகிச்சை மையம் என மொத்தம் 69 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 27,250 பேர் 69 மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள கட்டளை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் ஊக்கப்படுத்துவது போல் பழமை வாய்ந்த சித்த மருத்துவத்தையும் மேம்படுத்தப்படும் என கூறினார்.
ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல்தான் தென் சென்னையில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என கூறப்பட்டது அதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சித்த மருத்துவ சிகிச்சைகள் குறித்த சந்தேகங்களை 73587-23063 என்ற எண்ணில் சித்த மருத்துவ கட்டளை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: