• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை வெள்ளம்: எடப்பாடி பழனிசாமி குறைகூறி அரசியல் செய்கிறார் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தாக்கு

சென்னை வெள்ளம்: எடப்பாடி பழனிசாமி குறைகூறி அரசியல் செய்கிறார் - அமைச்சர் மா.சுப்ரமணியன் தாக்கு

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறைகூறி அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    சென்னை மழை பாதிப்புகளை தமிழக அரசு முன் எப்போதும் இல்லாத அளவு சிறப்பாக கையாண்டு வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை குறை கூறி அரசியல் செய்ய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

    சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘சென்னை மாநகரத்திற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் தேவைப்படும் 70 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலேயே பொழிந்துள்ளதாக தெரிவித்தார். முக்கால் மணிநேரத்தில் 13 சென்டிமீட்டர் அளவிற்கு மிக கனமழை பொழிந்துள்ளதாக கூறிய அவர் அதிக மழைப் பொழிவு காரணமாக கடல் மழைநீரை உள்வாங்காததே வெள்ளத்திற்கு முக்கிய் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழக சுகாதார துறையிடம் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் கையிருப்பில் உள்ளதால் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக கூறினார். மேலும் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களை கண்டறிந்து குணப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்

    சென்னையில் 200 காய்ச்சல் முகாம்கள் மற்றும். தமிழகம் முழுவதும் 1,508 காய்ச்சல் முகாம்கள் இன்று நடத்தப்பட்டு 60 ஆயிரம் பொதுமக்கள் சிகிச்சை பெற்று உள்ளதாக தெரிவித்தார். வர்தா மற்றும் கஜா புயல் சமயங்களில் பாதிப்பு நேரத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்கவில்லை என்று குறை கூறிய மா.சுப்பிரமணியன் சென்னை மழை வெள்ளத்தை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வரும் சூழலில் அரசை குறை கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: