படுக்கை புண் சிகிச்சைக்கு பிரத்யேக வார்டு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே முதல்முறையாக படுக்கைப்புண் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை வார்டுகள்.

  • Share this:
நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், படுக்கை புண் பாதிப்பிற்கு சிகிச்சை வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

தண்டுவடம் காயமடைந்து பல ஆண்டுகளாக படுத்த படுக்கையால் அவதிப்படுபவர்களுக்கு படுக்கை புண் நோய் ஏற்படுகிறது. படுக்கைப் புண் நோயிற்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் கடந்த ஜனவரியில் இருந்து தற்போதுவரை 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை கிடைக்காமல் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். இது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஒளிபரப்பியது.

செய்தி வெளியானதும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில்  படுக்கை புண் பாதிப்பிற்கு சிகிச்சை வருபவர்களை புறக்கணிக்காமல் உரிய சிகிச்சை அளிக்க  வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதோடு இந்தியாவிலேயே முதல் முறையாக  திருவண்ணாமலையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கைகளுக்கான விவாதங்களில் படுக்கைப் புண் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமன்கள்  மற்றும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 10படுக்கைகள் ஒதுக்கப்பட்டு பிரத்யேக வார்டு அமைக்கப்படும் எனவும்  ஹைட்ராலிக்  கட்டில், காற்றினால் நிறப்பபட்ட படுக்கையுடன் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. உணர்ச்சியற்ற உயிர் வழியில் கண்ணீர் கதைக்கு அரசின் அறிவிப்பு சற்று ஆறுதல் அளிக்கிறது.

Must Read : அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் - நீட், மதுரை எய்ம்ஸ் குறித்து விவாதிக்கிறார்

படிப்படியாக அவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பல்வகை மாற்றுத்திறனாளிகளை அறிவிப்பு உள்ளிட்ட இதர கோரிக்கைகளும் நிறைவேறும் என நம்புவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Suresh V
First published: