நினைத்த தேதியில் குழந்தை பெற்றெடுக்க விரும்பும் பெற்றோர்... கடிவாளம் போட்ட அமைச்சர மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

நாகரீகம் என்ற வகையில் நினைத்த தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மருத்துவர்களை கேட்கக்கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நாகரீகம் என்ற வகையில் நினைத்த தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மருத்துவர்களை கேட்கக்கூடாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

இன்றைக்கு நாகரீகம் என்ற வகையில் அவர்கள் நினைத்த தேதியில் குழந்தை பிறக்கவேண்டும் என நினைத்து அறுவை சிகிச்சை செய்து முன்னரே குழந்தை பெற்று எடுக்கிறார்கள்.. இது பிற்காலத்தில் ஆபத்து எனவே இதை தாய்மார்கள் இதை உணரவேண்டும்.
தேதியை முடிவு செய்து அவர்களாகவே அறுவை சிகிச்சைக்கு.செல்கிறார்கள்.

இதை அறிக்கையாகவும் அனைத்து மாவட்டங்களுக்கும் சொல்லவுள்ளோம்.. மேற்கு மாவட்டங்களிலுள்ள மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களுடம் ஆலோசனை நடைபெற்றது..
மகப்பேறு மையங்களில் யோகா மற்றும் மூச்சுபயிற்சி அளிக்க வேண்டும் அது  சுகப்பிரசவத்திற்கு.வழிவகுக்கும்.

Also Read : நீட் தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் தயாராக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுகப்பிரசவம் 100% இருக்கவேண்டியும், மகப்பேறு காலத்திற்கு முன்பே யோகா மற்றும் மூச்சி பயிற்சி 9 மாவட்டங்களிலுள்ள அலுவலர்கள் பெண் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க வலியுத்தியுள்ளோம்.  தமிழகத்தில் ஆண்டுக்கு10 லட்சம் பிரசவம் 61% அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: