அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகையால் தமிழர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அமைச்சர் மா.பாண்டியராஜன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் எச் 1 விசா குறித்து அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் எனில் அமெரிக்காவிற்கு அதிகமாக பயணம் செய்யும் தமிழர்களுக்கு வாய்ப்புகள் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தற்போது இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கருத்தை அதிகம் விவாதிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும்,
ஒருவேளை வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து அதிகமாக பேசப்பட்டால் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் துவங்கி ஓசூர் வரைக்கும் அமைக்கப்பட இருக்கக்கூடிய டிபன்ஸ் காரிடார் திட்டத்தின் மூலமாக பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
குறிப்பாக டிபன்ஸ் காரிடாரில் அதிகபட்சமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள்தான் பங்களிப்பை செலுத்தி உள்ளார்கள். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக துவங்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.