தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை இங்கில்லை - அமைச்சர் மா. பாண்டியராஜன்!

தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை இங்கில்லை - அமைச்சர் மா. பாண்டியராஜன்!
அமைச்சர் மா.பாண்டியராஜன்
  • Share this:
தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை தமிழகத்தில் இல்லை என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா. பாண்டியராஜன் பேரவையில் தெரிவித்தார்.


திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஜீரோ ஹவரின்போது, மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப்பட்டறை  அமைக்க அரசு வழி செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் திமுக ஆட்சியில் மாவட்டம்தோறும்  கட்டுரை, கவிதை போட்டிகளை நடத்தியது போல, அரசு நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




இதற்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டியராஜன், இளந்தமிழர்  இலக்கிய பயிற்சிப் பட்டறையை அரசு நடத்தி வருகிறது. இதை பல்கலைக்கழக அளவில் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமையை மாற்றி, மருத்துவம், கல்வெட்டியல், தொல்லியல், வானவியியல் என்று  பத்துக்கும் மேற்பட்ட துறைகளை தமிழில் நடத்தி வேலை வாய்ப்புக்கான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

Also see...



First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading