ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

மாண்டஸ் புயல்: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக வழங்குவது குறித்தும் முதலமைச்சர் முடிவு எடுப்பார்- அமைச்சர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறினார்.

இருப்பினும், எதிர்பாராதவிதமாக புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக வழங்குவது குறித்தும் முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ''எந்த கொம்பனாலும் தொட முடியாது.. நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..” - அனல் பறக்க பேசிய முதல்வர்!

மேலும். புயல் பாதிப்பால் இரண்டு பைபர் படகுகள், 24 படகுகள், 40 இயந்திர படகுகள் உள்ளிட்டவை சேதமடைந்ததாக கூறினார். இவற்றுக்கும் உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

First published:

Tags: Cyclone Mandous, Tamilnadu