Home /News /tamil-nadu /

'போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது' - அமைச்சர் கே.என்.நேரு

'போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது' - அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படும் என்று சேலத்தில் அமைச்சர் நேரு நேற்று பேட்டியளித்தார். இதுகுறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த துறைக்கென்று ஒரு அமைச்சர் இருக்கிறார். கட்டண உயர்வை அறிவிக்க முதல்வர் இருக்கிறார். போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என பதில் அளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தை பெறுவதற்காக, கடந்த, எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன.

இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு  ஆய்வு செய்தார். அவருடன், ஆட்சியர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி, சேலம் எம்எல்ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வை தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "திருச்சி அரிஸ்டோ மேம்பால பணிகள் மீண்டும் துவங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு யார், யாரோ சொந்தம் கொண்டாடுகின்றனர். நாங்களும் முயற்சி செய்தோம். பணிகள் துவங்கியிருக்கிறது.

திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதைக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் கூறியபடி, அரசு அதிகாரிகளை தடுத்தால், அவர் மீது வழக்குப் பாயும்.

திருச்சி விமான நிலையம் நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கி விட்டனர். திருச்சி விமான விரிவாக்கத்திற்காக, எங்களிடம் இருக்கும் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். மற்றபடி, மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் வேண்டுமானால், அதை அந்த தனியாரே கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.

ALSO READ |  மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் 50 வயது பெண் யானை உயிரிழப்பு... வனத்துறையினர் விசாரணை

சென்னையில் வரி உயர்த்தி, 22 ஆண்டுகள் ஆகின்றன. மற்ற ஊர்களில், 13 ஆண்டுகள் ஆகின்றன. 1998 நாங்கள் இயற்றிய சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால், அந்த சட்டத்தை ஆந்திரா எடுத்துச் சென்று அமல்படுத்திவிட்டது. அதன்பிறகு, 2008 ஆண்டு இயற்றிய சட்டத்தை அதிமுக தேர்தலுக்காக கிடப்பில் போட்டுவிட்டனர். ஒட்டுமொத்தமாக, 10 ஆண்டுகளுக்கான வரியை உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் ஆண்டுக்கொரு முறை வரி உயர்வை அமல்படுத்தியுள்ளோம்.

ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறுகின்றனர். மக்களுக்கு நன்மை செய்யவே இந்த சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆண்டுதோறும் வரி உயர்வு, மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்வதற்காக இல்லை. நகர்ப்புற அமைப்புகள் நிதிவளம் பெற்று, தன்னிச்சையாக செயல்பட இந்த சட்டம் உதவும்" என்றார்.

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படும் என்று சேலத்தில் அமைச்சர் நேரு நேற்று பேட்டியளித்தார். இதுகுறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த துறைக்கென்று ஒரு அமைச்சர் இருக்கிறார். கட்டண உயர்வை அறிவிக்க முதல்வர் இருக்கிறார். போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது" என்று அமைச்சர் நேரு பதிலளித்தார்.

செய்தியாளர் : விஜயகோபால்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: DMK, KN Nerhu

அடுத்த செய்தி