சென்னையில் பருவமழைக்கு முன் 70 சதவீத மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெறும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், மாநகராட்சி பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள 285 மாணவ மாணவியர்களுக்கு 67.39 லட்சம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என் நேரு மா.சுபிரமணியன், பி.கே சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினர்.
கடந்த 12 கல்வி ஆண்டுகளாக 7254 மாணவர்களுக்கு 16.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 425 மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் 90.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 285 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "வாழ்க்கை நமக்கு வாய்ப்பை மட்டும் தான் தருகிறது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் காலம் தான் மாணவ பருவ காலம்.
வன யானையை போல் வாழ்க்கையை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.இந்திய ஒன்றிய மாநிலங்களில் எப்படி முதன்மையான முதல்வர் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பெயர் எடுத்துள்ளது போல் தமிழக மாணவர்கள் பெயர் எடுக்க வேண்டும், " என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,"சென்னை மாநகராட்சியில் புதிதாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி கட்ட வேண்டும் எனவும் இதன் மூலம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது மாநகராட்சி வழங்கும் ஊக்கத்தொகை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சற்று உதவியாக இருக்கும்," என்றார்.
Also read... நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு தடை
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என் நேரு, "மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 70 - 80 % நிறைவு பெறும். தற்போது வரை சராசரியாக 50% மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை அம்மா உணவகம் மூலமாக செயல்படுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது ஆய்வில் உள்ளது. முதலமைச்சர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன்பேரில் திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: K.N.Nehru