குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டர் பொருத்தப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

கே.என்.நேரு

காவிரி ஆற்றில் மிகை நீர் இருக்கும் பட்சத்தில் அதனை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் இது.

 • Share this:
  குடிநீர் குழாய்களில் நேரடியாக மின் மோட்டர் பொருத்தப்பட்ட குடிநீர் இணைப்பைக் கண்டறிந்து குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்.

  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது, சென்னை மொத்த குடிநீர் தேவை 1150 மி.லிட்டர். அதில் 840 முதல் 850 மி.லிட்டர் நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள குடிநீரை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். காவிரி ஆற்றில் மிகை நீர் இருக்கும் பட்சத்தில் அதனை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் இது. இது நடைமுறைக்கு வருவதற்கு 4, 5 ஆண்டுகள் ஆகும்.

  லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்வதை முழுவதுமாக நிறுத்தி குழாய்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்

  கூட்டுக்குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் என 72 திட்டங்கள் 13 ஆயிரம் கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  Also read: ஆம்பூரில் உணவகத்தில் சேமியா பிரை கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக, காங்கிரஸ் பிரமுகர்கள்; வெளியான சிசிடிவி காட்சிகள்

  மொத்தம் 4093 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் கட்டமைப்புகள் உள்ளன. அடைப்புகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து பருவமழைக்கு முன்பாகவே தூர்வாரப்படும். கழிவுநீர் குழாய்களை அடைப்பெடுக்கும் பணிக்காக புதியதாக 76 நவீன இயந்திரங்கள் 3 மாத கால அளவிற்குள் கொண்டு வரப்படும். 10500 குடும்பங்களுக்கு புதியதாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்

  கூவத்தை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  Published by:Esakki Raja
  First published: