Home /News /tamil-nadu /

டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளி ஆக்க முடியும்.. அமைச்சர் நேருவின் அடுத்த சர்ச்சை

டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளி ஆக்க முடியும்.. அமைச்சர் நேருவின் அடுத்த சர்ச்சை

அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

நிகழ்ச்சி ஒன்றில் டிஎஸ்பி குறித்து அமைச்சர் நேரு பேசிய பேச்சுகள் சர்ச்சையாகியுள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பங்கேற்றார். மேடையில் வெகு இயல்பாக பேசிக் கொண்டிருந்த அவர் பேச்சு திடீரென்று அவருக்கு முன்பு அமர்ந்திருந்த, திருச்சி மாவட்டம் ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசு தேவனை நோக்கி திரும்பியது.

"இவர் எனக்கு செக்யூரிட்டி எஸ்ஐயாக இருந்தவர். பல்வேறு பணிநிலையை கடந்து தற்பொழுது டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரது திறமை என்னவென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். இந்த டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்கவும் முடியும். குற்றவாளியிலிருந்து எடுத்து விடவும் முடியும். அவர் எங்களுடன் வளர்ந்தவர் என்பதால் இதற்கு மேல் ஒன்றும் கூற முடியாது" என்று பேசினார்.

இதையும் படிங்க: ஒருமையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு.. சென்னை மேயர் பிரியாவின் விளக்கம் என்ன?

அவரின் யதார்த்தமான பேச்சை கேட்டு டிஎஸ்பி உட்பட கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால் அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பலரும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக சர்ச்சையில் அண்மையில் கே.என்.நேரு சிக்கினார். இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரியா, அமைச்சர் ஒருமையில் பேசியதாக எடுத்துகொள்ளாமல் உரிமையில் பேசியதாகவே எடுத்துகொண்டேன்’ எனக் கூறி சர்ச்சைக்கு முடிவு வைத்தார். இந்நிலையில்தான் டிஎஸ்பி குறித்த சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார்.

 
Published by:Murugesh M
First published:

Tags: KN Nerhu, Minister, Trichy

அடுத்த செய்தி