• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வரும் மூன்று தினங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவுரை

வரும் மூன்று தினங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவுரை

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் வரும் மூன்று நாள்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ‘48 நிவாரண முகாம்களில் 1,107 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3.5 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 16 சுரங்கப் பாதைகளில் நீர் இருந்த நிலையில் தற்போது 14 சுரங்கப்பாதைகளில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் ஒரு லட்சம் பேர் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நவம்பர் 9, 10, 11-ம் தேதிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 10-ம் தேதி அதிகமான மழை பெய்தாலும் அரசு அதனை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 290 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. 79 இடங்களில் முழுவதுமாக தண்ணீர் ராட்சத மோட்டார்கள் கொண்டு அகற்றப்பட்டுள்ளது.

    ஒரு முதல்வரை எழுப்பி சொல்ல முடியாமல் சென்னையே அல்லோல்பட்டது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்று தமிழகத்தில் இல்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியை விட சிறப்பாக செயல்பட்டுவருகிறோம். ஐந்து மாத காலத்தில் திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: