Home /News /tamil-nadu /

3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

TN Assembly : 3 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்  இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், போடிபாளையம் ஊராட்சி புதுக் காலனியில் பட்டா வழஙகப்பட்டவர்களுக்கு நில அளவை வழஙகப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அப்பகுதி மக்கள் வெளிநபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாக கூறியதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டால் நில அளவை செய்து தரப்படும் என்று கூறினார்.

மேலும், மூதாதையர்களாக இருக்கும் வாரிசு தாரர்களுக்கு பட்டா மாறுதல் வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், வாரிசுதாரர்கள் பட்டா மாறுதல் செய்வதில் சில பிரச்னை இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Must Read : உதவி பேராசியர் மீது பாலியல், தீண்டாமை புகார்.. ஆதரவாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சை

முதலமைச்சர் கடந்த ஆண்டும், இந்த ஆண்டிலும் 3 லட்சம் பட்டாக்கள் வழங்க அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
Published by:Suresh V
First published:

Tags: Patta, TN Assembly

அடுத்த செய்தி