அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பெண் ஒருவரை தாக்குவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறூத்தியுள்ளார்.
பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை, தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை அவர் தெரிவித்திருந்தார். பின்னர், ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், ஊட்டச்சத்து தொடர்பாகவும் மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மீது புகார் தெரிவித்திருந்தார்.தற்போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பெண் ஒருவரை தாக்குவது போன்ற வீடியோவை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?
விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை @BJP4TamilNadu முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! pic.twitter.com/iV4fyKLnXQ
— K.Annamalai (@annamalai_k) July 12, 2022
அதில், மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.