• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அடுத்த இருதினங்களுக்கு அனாவசியாக பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வேண்டுகோள்

அடுத்த இருதினங்களுக்கு அனாவசியாக பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வேண்டுகோள்

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வரவேண்டாம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்னும் இரு தினங்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் சென்னையில் வசிக்கும் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. சென்னையின் மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், ‘பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க சென்னை மக்கள் 1070 என்ற எண்ணிலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 1077 என்கிற எனினும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொள்ளலாம். 9445869843 என்கிற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை பெருவெள்ளத்திற்கு மிக முக்கியமான காரணம் ஆக்கிரமிப்புகள் என்றும் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

    பேரிடர் காலங்களில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்டுகோள்விடுத்தார். தொடர்ந்து பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ‘குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெய்யவுள்ள கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வரவேண்டாம்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: