4 மணிநேரம் உயிரற்ற உடலாக இருந்தேன் - அமைச்சர் காமராஜ் கண்ணீர்

4 மணிநேரம் உயிரற்ற உடலாக இருந்தேன் - அமைச்சர் காமராஜ் கண்ணீர்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

பதினைந்து நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன். நன்னிலம் மக்களின் பிரார்த்தனையால் மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளேன்.

 • Share this:
  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று தாக்கம் குறித்து  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேசினார்.

  இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், 95 சதவீத நுரையீரல் செயலிழந்து விட்டது. ஏழு நாட்கள் நினைவு கிடையாது. பதினைந்து நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன். நன்னிலம் மக்களின் பிரார்த்தனையால் மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளேன்.

  இந்த நேரத்தில் நான் உடல் நலம் பெற வேண்டுமென வாழ்த்திய எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவை கூட்டத்தின் போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை கூறி கண்ணீர் விட்டார் என்பது குறிப்பிடதக்கது.

   
  Published by:Vijay R
  First published: