நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% - 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

மத்திய அரசு குழு விரைவில் தமிழகம் வர இருப்பதாகவும் அப்போது பெறக்கூடிய நெல்லின் ஈரப்பதம் அளவு 22 சதவீதம் வரை இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17% லிருந்து 22% ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர் குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதை அடுத்து நெல் விளைச்சல் அதிகரித்திருப்பதாகவும் இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்

இதுகடந்த திமுக ஆட்சியில் ஒப்பிடும்போது 10 மடங்கு கூடுதல் என தெரிவித்தார். விவசாயிகளிடம் அனைத்து நெல் மூட்டைகளையும் அரசு கொள்முதல் செய்யும் எனவும் நாளொன்றுக்கு 5 லட்சம் நெல் மூட்டைகள் 2,135 கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கக்கூடிய குறைகளை பெரிதுபடுத்தி காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். இது நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியக்கூடிய கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் விடுமுறை இல்லாமல் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Also read... பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு ரூபாய் பெற்றால் கூட அது கேவலமானது என தெரிவித்தார். மேலும் தற்போது விவசாயிகளிடம் பெறக்கூடிய நெல் மத்திய அரசின் விதிமுறைப்படி 17 சதவீதம் ஈரப்பதம் இருக்கக்கூடிய நெல்கள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு அதனை 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அரசு குழு விரைவில் தமிழகம் வர இருப்பதாகவும் அப்போது பெறக்கூடிய நெல்லின் ஈரப்பதம் அளவு 22 சதவீதம் வரை இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: