நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும்... அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும்... அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
  • Share this:
அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நவம்பர் மாதம் வரை நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்குவதை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டிலும் நவம்பர் மாதம் வரை இலவசமாக கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.Also read... ஊரடங்கால் முடங்கிப் போன மாணவர்களின் கல்வி... கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படும் மாணவ, மாணவிகள்

இந்த ஆணைக்கு முன்னதாக, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பணம்கொடுத்து துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வாங்கியவர்களுக்கு அதற்கான தொகை ஆகஸ்ட் மாதத்தில் பொருள்கள் வாங்கும்போது ஈடு செய்யப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading