பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி

பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி
அமைச்சர் கடம்பூர் ராஜு
  • News18
  • Last Updated: July 18, 2019, 3:08 PM IST
  • Share this:
பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மானிய கோரிக்கை விவாத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம், சலுகை கட்டணத்தில் வீட்டுமனை, அரசு குடியிருப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அது தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த குழுவில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி துறை செயலர் செயலாளராகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் உறுப்பினராகளாகவும் இருப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இக்குழு பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து அறிக்கை பெறப்படும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.Also see...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading