Home /News /tamil-nadu /

அதிமுகவில் ராஜ்யசபா மாப்பிள்ளை யார்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அதிமுகவில் ராஜ்யசபா மாப்பிள்ளை யார்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

  • News18
  • Last Updated :
அதிமுகவில் ராஜ்யசபா பதவிக்கு தகுதியான மாப்பிள்ளையை பொறுப்போடு தேர்வு செய்து விரைவில் அறிவிப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏசிஎஸ் கல்விக்குழுமம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி மூட்டைகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அமைச்சர் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் விரைவில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். அதன் மூலம் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். கமல்ஹாசன் மூன்றாவது அணி உருவாக்குதல் குறித்த கேள்விக்கு எத்தனை அணிகள் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ராஜ்யசபா சீட் யாருக்கு என்பது குறித்து ஏற்கனவே முதலமைச்சர் தெளிவாக விளக்கி இருக்கிறார். ஒரு அழகான பெண் இருந்தால் பலர் பெண் கேட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நல்ல மாப்பிள்ளையை பொறுப்போடு தேர்வு செய்வோம் என்று தெரிவித்தார்.

ரஜினி கமல் கூட்டணி என்பது திருமணம் ஆகாமல் குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு சமமானது. சசிகலாவுக்கு அதிமுகவில் இனி இடமில்லை என்று முனுசாமி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ வாய்ப்பில்லை என்பதை நீங்களே சொல்லி விட்டீர்கள் என்று முடித்துக் கொண்டார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Kadambur raju, Rajya Sabha Election 2020

அடுத்த செய்தி