துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்டுக்கு என்ன காரணம்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியே செயற்குழு கூட்டத்தில் எழவில்லை. செயற்குழு கூட்டத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதனை தான் ஓ.பன்னீர் செல்வம் சூசகமாக தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக தகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘அ.தி.மு.கவில் எவ்வித பிரச்சினையும் இல்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரது ட்விட்டில் சரியாக தான் சொல்லியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். தற்பொழுது துணை முதல்வராக இருந்து அரசு சிறப்பாக செயல்பட துணையாக இருக்கிறார். செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. அது எல்லாம் வெளிவரவில்லை. அது போன்று முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியே அங்கு எழவில்லை.

  வெளியில் தவறான கருத்துக்கள் பரப்பபட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதனை தான் சூசகமாக தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர் என்பதால் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் சந்திப்பது வழக்கமான ஒன்று தான். இதில் அரசியல் எதுவும் இல்லை. இதனை அரசியலாக்கி பார்க்கின்றவர்களுக்கு அரசியலாக தெரியும். 7ந் தேதி முதல்வர் வேட்பாளர் பற்றி அறிவிப்பது பற்றி தலைமை கழகம் தான் தெரிவிக்கும். கொரோனா காலம் என்பதால் திரையரங்கு மூடப்பட்டு இருப்பதால் தயாரிப்பாளர்களின் பொருளதாரத்தின் அடிப்படையில் சில படங்கள் மட்டும் ஓ.டி.டியில் வெளியாகி உள்ளது.

  தற்பொழுது ஓ.டி.டியில் திரைப்படம் வெளியாகி வருவது தற்காலிக ஏற்பாடகதான் இருக்கும் என்று நினைக்கிறேன். தற்காலிக ஏற்பாடாக இருந்தால் மகிழ்ச்சி.

  நிரந்தரமாக இருந்தால் திரையரங்குகள் பாதிக்கப்படும். ஓ.டி.டியில் படங்கள் வெளியாகுவதை தடுப்பது பற்றி திரைப்படத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவு வரும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: