நாங்குநேரி தொகுதியை பா.ஜ.கவுக்கு விட்டுக்கொடுக்கிறோமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

பல சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர்.ஆனால் எம்.ஜி.ஆர்-க்கு பின் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்ற வரலாறு தமிழகத்தில் இல்லை.

நாங்குநேரி தொகுதியை பா.ஜ.கவுக்கு விட்டுக்கொடுக்கிறோமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
கடம்பூர் ராஜு
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2019, 10:32 AM IST
  • Share this:
நாங்குநேரி தொகுதியை பா.ஜ.கவுக்கு விட்டுக்கொடுப்பது பற்றி கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ’கமல்ஹாசன் ஊழலைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. அவர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது அதிகமான விலைக்கு டிக்கெட் விற்பனையாவது தான் ஊழல்.

அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளைத் தான் தமிழக மக்கள் அங்கீகரித்துள்ளனர். பல சினிமா நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். ஆனால் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்ற வரலாறு தமிழகத்தில் இல்லை. ஆழம் தெரியாமல் கமல் அரசியலில் காலை விட்டுவிட்டார். அதிலிருந்து எப்படி வெளியேற வேண்டுமென தெரியாமல் அவர் தத்தளித்து கொண்டிருக்கிறார் என்றார்.


மேலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெரும். நாங்குநேரி தொகுதி பா.ஜ.கவிற்கு விட்டுகொடுப்பது பற்றி தலைமை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Also Watch : ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் நயன்தாரா வரை... நடிகைகளின் சம்பள விவரம்

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading