• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கூவத்தூரில் ஒவ்வொருவரையும் பிடித்துவைப்பதற்கு பட்டப்பாடு பெரியபாடு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

கூவத்தூரில் ஒவ்வொருவரையும் பிடித்துவைப்பதற்கு பட்டப்பாடு பெரியபாடு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்தூரில் ஒவ்வொருவரையும் பிடித்துவைப்பதற்கு பட்டபாடு பெரியபாடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கோவில்பட்டியில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘2016 சட்டமன்ற தேர்தலில் தெய்வத்தினால் தப்பித்தான் பிழைத்தேன். குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றேன். நான் அமைச்சரானதை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த ஆட்சி நீடிக்குமா, தாங்குமா என்ற எண்ணம் மக்களை போன்று எங்களுக்கும் இருந்தது. 18 எம்.எல்.ஏ ஒரு புறம் போனார்கள், 11 எம்.எல்.ஏக்கள் இன்னொரு புறம் போனார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சி போய் விடும் என்று கூறினார்கள்.

  ஏனென்றால் அது போன்ற சூழ்நிலை. ஒவ்வொருத்தரையும் பிடிச்சு வைத்து கூவத்தூரில் பட்டபாடு பெரியபாடு. தெய்வாதீனமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தான், ஒரு நிலைப்பாட்டில் நிலைத்த ஆட்சியாக நீடித்த ஆட்சியாக மாறியது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்ட வேண்டும். எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல், அறிவு முதல்வரிடம் உள்ளது. இதற்கு முன் தேர்தல் வந்தால் வேறு யாரும் வெற்றி பெறக்கூடிய நிலை இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் முதல்வரின் நிலைப்பாடு, நிர்வாக திறன் காரணமாக அ.தி.மு.க வெற்றி பெறும் நிலைக்கு நிறுத்தியுள்ளார்.

  நான் ஆன்மீகத்தினையும், நேரம் காலத்தினையும் நம்பக் கூடியவன். நேரம், காலம் நன்றாக இருந்தால் மீண்டும் போட்டியிட ஒரு வாய்ப்பு வரும். இல்லையென்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் செய்த பணிகள் காரணமாக யாரை நிறுத்தினாலும், அ.தி.மு.க நூற்றுக்கு நூறு வெற்றி பெறும். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தான் அமையும் சூழ்நிலை உள்ளது. எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் கூறினாலும், மக்களால் குற்றச்சாட்டு சொல்லாத அளவிற்கு திறமையான, எளிமையான முதல்வரை பெற்றுள்ளோம்.

  இடையில் பிரச்னைகள் இல்லமால் இருந்து இருந்தால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்போம். தாமிரபரணி - வைப்பார் திட்டத்திற்கு நில எடுப்ப பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறும்போது விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பம்பை ஆறு - வைப்பாறு இணைக்கும் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. வரும் தேர்தலில் இதனை தேர்தல் அறிக்கையாக வைக்க உள்ளோம். கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  3 தொகுதி, 2 கோட்டம், 5 ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கி கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்கும் திட்டங்களை மனதில் வைத்து இருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று மனதில் நினைத்துள்ள பணிகளை நிறைவு செய்து விட்டு, அடுத்தவருக்கு வழி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளேன்.

  3-வது முறை வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் உள்ளது. இதற்கு அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவைச் சேர்ந்த வேறு ஒருவர் தான் போட்டியிடுவர்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: