தேர்தலின்போது அ.தி.மு.கவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தேர்தலின்போது அ.தி.மு.கவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ரஜினிகாந்த், கடம்பூர் ராஜூ

அ.தி.மு.கவுக்கு ஆதரவாக தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா என்பது குறித்து நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன். அதற்கான தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். அதனையடுத்து, அவர் கட்சி தொடங்குவது உறுதியானது. இந்தநிலையில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக பங்கேற்றிருந்தபோது, உடன் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால், ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சைப் பெற்றார். இந்தநிலையில், உடல்நலனைக் கருத்திக் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

  இந்தநிலையில், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நடிகர் ரஜினிகாந்த் அவர் கட்சி ஆரம்பிப்பதும், ‌தொடங்காமல் இருப்பது அவரது சொந்த விருப்பம்.
  பொதுவாக நடிகர் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதனால் அ.தி.மு.கவுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை. புதியதாக கட்சித் தொடங்குபவர்கள் அதிருப்தி வாக்குகளை பிரிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ள கருத்து கேட்டதற்கு அ.தி.மு.க ஆட்சியில் எவ்வித அதிருப்தி மக்களிடம் இல்லை என்றார்.

  ரஜினிகாந்த் தேர்தலின்போது யாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய சொந்த விருப்பம். கட்டாயப்படுத்த முடியாது. நண்பர் என்கிற முறையில் முதல்வர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அ.தி.மு.கவுக்கு ஆதரவாக தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: