'லாக்அப்’ மரணம் குறித்து கனிமொழி கூறியது போல தமிழகத்தின் நிலை இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ!

லாக்அப் மரணம் குறித்து கனிமொழி எம்பி கூறியது போல தமிழகத்தின் நிலமை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

'லாக்அப்’ மரணம் குறித்து கனிமொழி கூறியது போல தமிழகத்தின் நிலை இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ!
ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறும் அமைச்சர் கடம்பூர் ராஜு
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவியை அமைச்சர் கடம்பூர் ராஜு உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவா், இந்த சம்பவத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், லாக்அப் மரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று எம்.பி கனிமொழி தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்பதில் கண்னும் கருத்துமாக தமிழக அரசு இருக்கிறது.

அவா்கள் (கனிமொழி) சொல்வது போன்று நிலமை இங்கு இல்லை. இந்தியாவில் தமிழகத்தில் சென்னை, கோவை காவல் நிலையங்கள் சிறந்த பராமரிப்பில் இருக்கிறது. தமிழக ஒட்டு மொத்த காவல்துறையும் இப்படி இல்லை. இது போன்ற சம்பவம் நடந்தால் அரசு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கிறது. தமிழக காவல் துறை பல்வேறு விருதுகளை பெற்றது சிறந்து விளங்குகிறது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading