• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

திரையரங்குகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் முதல்வர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். 

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. வரும் 13ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வருகை தர உள்ளதால், முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்.செ.ராஜூ ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘அதிமுக ஆட்சியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.  மத்திய அரசின் தொல்லியல் துறையில் பட்டயபடிப்பில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் திரைப்பட நடிகர் என்பதால் மட்டும் அரசியலுக்கு வரவில்லை.

திரைப்படத்தில் நடிக்கும் போதே சமூகப் பணிகளில் ஈடுபட்டனர். திரைப்பட புகழ் காரணமாக மட்டும் இருவரும் அரசியலுக்கு வரவில்லை என்றும், எம்.ஜி.ஆர் தான் எனது இதயக்கனி என்றார் அண்ணா. வேறு யாரையும் அவர் சொல்லவில்லை. இன்றைக்குள்ள முதல்வர், துணை முதல்வர் இருவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர்கள்.

இருவரின் நிர்வாக செயல்பாடுகளை உடனிருந்து கவனித்தனர். 2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற தேர்தல் வாக்குறுதிகளை தந்தார். அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றியுள்ளார்.4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்துள்ளார். இன்றைக்கும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக, தலைவராக தான் மக்கள் பார்க்கிறார்கள் தவிர அந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க மக்கள் தயராக இல்லை.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதிவு ஏற்பார். திரையரங்குகள் திறப்பது பற்றிய மத்தியரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறோம்.

ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துரையினருக்கு அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது. மத்தியரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டுள்ளது. தவிர கட்டயமாக திரையரங்கு திறக்க சொல்லவில்லை. இருப்பினும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை, தொழிலாளர்களின் நலன் கருதி ஆலோசனை செய்து விரைவில் திரையரங்கு திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் முதல்வர் தெரிவித்துள்ளார்.


சுதந்திர தினத்தின்போது தாழ்த்தபட்ட சமூகத்தினை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்  கொடியேற்றப்பட அனுமதிக்கவில்லை என்றதும், உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்தது. ஊராட்சி செயலாளரை பதவி நீக்கம் செய்ததாகவும், அரசுக்கு எவ்வித பாகுபாடும் கிடையாது. அ.தி.மு.க ஆட்சியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: