கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜூ

 • News18
 • Last Updated :
 • Share this:
  மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அதிமுக அரசு போட்ட பிச்சை என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல், தாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

  சுகாதாரத் துறையை சிறப்பான முறையில் கவனித்துவரும் விஜயபாஸ்கர் எந்த முறைகேடும் செய்யவில்லை என்று அவர் கூறினார். மாறாக, டிடிவி.தினகரன்தான், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிறைக்கு சென்றார் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

  ஆர்.கே.நகர் தொகுதியில் மோசடி செய்து வெற்றிபெற்ற டிடிவி.தினகரன், தனது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடத் தயாரா என்று அமைச்சர் சவால் விடுத்தார். மேலும் தங்கள் மீது என்ன குற்றச்சாட்டுக்களை தெரிவித்தாலும், தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார்.
  Published by:Vaijayanthi S
  First published: