தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேளம் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை இசைத்து வரவேற்பு அளித்தனர்.
இதையெடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிவாரண பொருள்களை வழங்கினார். தொடர்ந்து புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில் 600 மாணவ -மாணவிகள் குடுபத்திற்கும், முகம்மது சாலியபுரத்தில் 500 இஸ்லாமிய மக்களுக்கும் கொரோனா நிவாரண பொருள்களை அமைச்சர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், தமிழக அரசுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று முதல்வர் தெளிவாக கூறியுள்ளார். அவருக்கு ஜாமீன் மட்டும் கிடைத்துள்ளது. வழக்கு அப்படியே தான் உள்ளது. நீதியரசர்களை மட்டுமின்றி, ஆர்.எஸ்.பாரதி ஊடகத் துறையினரையும் இழிவாக பேசியுள்ளார்.
இது போன்ற பேச்சு எல்லாம், ஜனநாயகம், அரசியலமைப்பிற்கு உகந்தது அல்ல என்பதுதான் அதிமுக கருத்து, அதைதான் முதல்வரும் தெளிவாக கூறியுள்ளார்
அதனைத் தொடர்ந்து, திமுக எம்.பிகள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் ஜாமீன் தாக்கல் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தலைமை செயலகத்தில் என்ன நடந்து, தான் யாரையும் புறக்கணிக்கவில்லை என்று தலைமை செயலாளர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அதிலும் திமுகவினர் அரசியல் சாயம் பூசி ஒரு கருத்தினை சொன்னதால் முன் ஜாமீன் கேட்கின்றனர். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பது தான் இதற்கு சரியான விடையாக இருக்கும் என்றும், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 மற்றும் 3 மாதம் ரேஷன் பொருள்கள் இலவசமாக அரசு வழங்கியுள்ளது. நிதி நெருக்கடியான காலத்திலும், சுய ஊரடங்கினால் பொது மக்கள் பாதிக்க கூடாது என்று நிவாரணம் வழங்கி வருகிறது.
கொரேனாவிற்கு சிறப்பு நிதி வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்திய போது, மத்தியரசு ஒரு நிதியை அறிவித்துள்ளது. ஆனால், இந்த நிதி தமிழக மக்களுக்கு தேவையானவற்றை செய்ய போதுமானதாக இல்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களின் மீது கொண்ட ஈடுபாடு மற்றும் நமது உரிமையை கேட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முதல்வர் உள்ளார் என்று கூறினார்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Minister kadambur raju