ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் சொன்னது பொய்த்துப்போனது - அமைச்சர் கடம்பூர் ராஜு

கடம்பூர் ராஜு

மக்களவை தேர்தலில் அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் கூறியது பொய்த்துவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

  மக்களவை தேர்தலில் அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ”இந்த தேர்தல் முடிவு திமுகவிற்கு வெற்றியின் நிலையில் வந்தால் கூட,  மே 23ம் தேதி மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் தரும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், மாற்றம் வரவில்லை ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

  தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் கலைஞருடைய நினைவிடத்திற்குச் சென்று பதவியேற்பது போல ஒத்திகை பார்த்தனர் என்பது செய்திகள் வந்துள்ளது. ஆனால் எல்லாம் மாறிவிட்டது. ஸ்டாலின் ஒரே குறி மக்களுக்கு சேவை செய்வதது இல்லை. முதலமைச்சராக வேண்டும்.

  ஸ்டாலின் கனவு முதலமைச்சர், இந்த பட்டத்தை நாங்க வழங்கவில்லை மக்கள்தான் வழங்கி உள்ளனர் எனவே வாழ்நாள் முழுவதும் அவர் கனவு முதலமைச்சர்” என்று கூறினார்.

  Published by:Sankar
  First published: