பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியிட தடையா? அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டால், பெரிய பட்ஜெட் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்

அமைச்சர் கடம்பூர் ராஜு
- News18 Tamil
- Last Updated: June 4, 2020, 7:15 PM IST
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் மற்றும் நாலாட்டின்புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து மகளிர் குழுக்களுக்கு ரூ.2.41 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கினார்.
தொடர்ந்து இடைச்செவலில் புதிய சாலை அமைக்கும் பணிகள், வில்லிசேரி, நாலட்டின்புதூரில் குடிமராமத்து பணிகள், புதியதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். இதையெடுத்து கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சாலை மற்றும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், திரையரங்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டால் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை வெளியிட கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “திரைப்படங்களை வெளியிடுவது பற்றி அரசு முடிவு எடுக்க முடியாது, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது, எந்த தேதியில், எந்த படங்கள் வெளியிடுவது என்பது பற்றி அவர்கள் தான் முடிவு செய்ய முடியும், தயாரிப்பாளர் சங்கத்தினர் தேர்தல் நடைபெறாத காரணத்தினால் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
படங்களை வெளியிடு தொடர்பாக அவர்களுக்குள் (தயாரிப்பாளர்களுக்குள்) பேசிக்கொள்கிறோம் என்றால் அரசு தலையிடாது. அதே நேரத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும், சின்னத்திரையினர் படபிடிப்பு நடத்த கோரிக்கை வைத்த ஒரே நாளில் முதல்வர் கவனத்திற்கு சென்று சில நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிபந்தனைகளில் சில தளர்வுகள் கேட்டனர். முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று அவர்கள் கோரிக்கை நிறைவேற்றபட்டது. அதே போன்று சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றார்.
தனியார் கருத்து கணிப்பில் செல்வாக்கு இல்லாத முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் இடம் பெற்றுள்ளது பற்றி கேட்டதற்கு,இந்திய டூடே 2 முறை தமிழகத்திற்கு சிறந்த நிர்வாகத்திற்கு விருது வழங்கியது. இதை தமிழக மக்கள் தங்களுக்கு கிடைத்த பெருமையாக நினைத்தார்கள். இதை அனைத்து ஊடகங்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் வரவேற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால் இது தனியார் அமைப்பு நடத்தியுள்ளது, இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக காவல் நிலையங்கள் விருது பெற்றன. மக்கள் நல்வாழ்வு துறை, வேளாண்மை துறையில் உணவு உற்பத்தியில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக மத்தியரசிடம் தமிழகம் விருது பெற்று வருகிறது.
உள்ளாட்சி துறையில் ஒரே நேரத்தில் 99 விருதுகளை பெற்ற மாநிலம் தமிழகம், இவற்றினை விளம்பரபடுத்தி பெருமைபட்டு கொண்டால் நமக்கு நல்லது, தனியார் கருத்து கணிப்புகளை கணக்கில் எடுத்து கொள்வது சரியாக இருக்காது. திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் தமிழக சமூக நலத்துறைக்கு வந்துள்ளது.
ஊரடங்கு நேரத்தில் என்ன, என்ன பணிகள் நிலுவையில் உள்ளது என்று கேட்டு அறிந்து இருக்கிறார்கள், இது தொடர்பாகவும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, விரைவில் நல்ல முடிவினை முதல்வர் அறிவிப்பார் என்றார்.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து மகளிர் குழுக்களுக்கு ரூ.2.41 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கினார்.
தொடர்ந்து இடைச்செவலில் புதிய சாலை அமைக்கும் பணிகள், வில்லிசேரி, நாலட்டின்புதூரில் குடிமராமத்து பணிகள், புதியதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார். இதையெடுத்து கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சாலை மற்றும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.