அரசு கல்லூரிகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் - உயர் கல்வித்துறை அமைச்சர்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

இந்த ஆண்டே 11 மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் சூழுலில் ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, 25 % இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் பொது விவாதத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, “10 புதிய அரசு கல்லூரிகளை உருவாக்கோவோம் என அறிவித்துள்ளீர்கள், 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் சூழுலில் ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

    இதற்குப் பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு கல்லூரிகளில் இருக்கின்ற இடத்திலேயே 25 சதவீத இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    இந்நிலையில், அதிமுக ஆட்சி காலத்தில் தான் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும், அதற்கான மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் எனவும் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

    Must Read : கருணாநிதி செய்தது தவறு என்றால் அதே தவறை மு.க.ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர் பாபு

    தலைமைச் செயலகம்


    இதற்கு பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 11 மருத்துவக்கல்லூரிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரடியாக ஆய்வு செய்துள்ளதாகவும், மேலும், முதலமைச்சர் உத்தரவின் பெயரில் டெல்லி சென்று ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 மாணவர் சேர்க்கை என்ற விகிதத்தில் 1,650 மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நிச்சயம் விரைவில் ஒன்றிய அரசு அனுமதிக்கும் என்றும், இந்த ஆண்டே 11 மருத்துவ கல்லூரிகளிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: