Home /News /tamil-nadu /

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் க.பொன்முடி உறுதி

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - அமைச்சர் க.பொன்முடி உறுதி

பொன்முடி

பொன்முடி

TN Assembly : பாலிடெக்னிக் முடித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சேர்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தனது தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கிறது என்றும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால் 5 புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார். மேலும், மாணவர்களுக்கு பயிற்சி அளிப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

    முன்பெல்லாம் பாலிடெக்னிக் படித்தவர்கள் அண்ணா பல்கலை பொறியியல் படிப்புகளில் சேரமுடியாது என்றும் அந்த முறை மாற்றப்பட்டு, தற்போது, பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சேரலாம் என்றார்.

    Must Read : தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு வெளுத்து வாங்கப்போகுது மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Minister Ponmudi, TN Assembly

    அடுத்த செய்தி