ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்’ - அமைச்சர் பாண்டியராஜன்

‘டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்’ - அமைச்சர் பாண்டியராஜன்

மாபா பாண்டியராஜன்

மாபா பாண்டியராஜன்

தேமுதிகவுக்கு எங்களால் என்ன தர முடியுமோ அதை நாங்கள் தருவோம் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பரபரப்பான தேர்தல் அரசியல் சூழலில் காமெடி செய்ய ஆட்கள் வேண்டும், எனவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் பாமக, திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 250 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், அதிமுக தெற்கு மாவட்டசெயலாளர் வி.அலெக்சாண்டர் தேர்தல் பொறுப்பாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ஆவடியில் இதுவரை 5 ஆயிரம் பேர் மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளதாகவும், பாலில் கலந்து சர்க்கரைபோல், மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் இனைந்தவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் சேர்ந்துள்ள நேரம் தேர்தல் நேரம் என்பதால் மிகப்பெரிய எதிரியை நாம் எதிர்கொண்டு மீண்டும் இரட்டை இலையை 3 ஆவது முறையாக தமிழகத்தில் மலரவைக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த பெரும் பணியில் நீங்கள் எல்லோரும் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் நிறையபேர் சேர்ந்து இருக்கிறீர்கள். நம் கழகத்தின் அடிப்படை கொள்கையே புரட்சித்தலைவி அம்மா சொன்னது போல் அமைதி, வளம், வளர்ச்சி அதேபோல் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று உள்ள இந்த கட்சியில் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், “திமுக ஆட்சியில் மொத்தம் தமிழுக்கான விருதுகளை அறிவித்தது 8 விருதுகள் தான். ஆனால் இன்று 88 விருதுகள் உள்ளன. இவ்வளவு விருதுகள் கிடைத்திருக்கிறது என்றால் அது தமிழுக்கு மட்டும்தான், அதை உருவாக்கியது அண்ணன் எடப்பாடியார் தான்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், “142 பேருக்கு ஒரே நாளில் கலைமாமணி விருது வழங்கியது அண்ணன் எடப்பாடியார். நான்கு வருடத்தில் மட்டும் 345 பேருக்கு கலைமாமணி விருது வாங்கியுள்ளதாகவும், சாதாரண நாட்டுப்புற கலைஞர்கள் என்று 5 பவுண் தங்கத்தை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். அண்ணன் எடப்பாடி அவர்களை கலைகளின் காப்பாளன் என பட்டம் கொடுத்து இருக்கிறார்கள்” எனவும் கூறினார்.

அத்துடன், “பரபரப்பான தேர்தல் அரசியல் சூழலில், காமெடி செய்ய ஆட்கள் வேண்டும் எனவே டிடிவி தினகரன் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார். அமமுக தலைமையில் அதிமுக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை. பாமகவுடன் முதலில் கூட்டணி பேசி முடித்துள்ளோம். அதே போன்று வேட்பாளர் நேர்காணல் முடிந்து, கூட்டணிகள் அமைத்து, வேட்பாளர் பட்டியலையும் முதலில் வெளியிடுவோம். இவற்றிலிருந்து திசைமாற்ற யார் என்ன முயற்சி செய்தாலும் அதில் அதிமுக சிக்க தயாராக இல்லை” என்றார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தெடர்ந்து பேசிய அவர், “எல்.கே சுதீஷ் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுளார். எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும், எங்கள் முதல்வர் என கூறுவதற்கு தகுதியான மனிதர் விஜயகாந்த். அதிமுக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.

Must Read:  அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரம்: அமித்ஷா, ஜே.பி. நட்டா தமிழகம் வரும் தேதி அறிவிப்பு

என்ன தேவையை அவர்கள் கூறியுள்ளார்கள் எங்களால் என்ன தர முடியுமோ அதை தருவோம் சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. வழி மாறி செல்ல வேண்டாம் எங்கள் ஒரே குறிக்கோள் வெற்றிதான்” என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

First published:

Tags: Election 2021, Minister Pandiayarajan, TN Assembly Election 2021, TTV Dhinakaran