• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’மது இல்லா தமிழகம் உருவாகும் காலம் வரும்’- அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

’மது இல்லா தமிழகம் உருவாகும் காலம் வரும்’- அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

’அதிமுக அரசின் முதன்மைக் கொள்கையே மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான்’ - ஜெயக்குமார்

  • News18
  • Last Updated :
  • Share this:
”மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் முக்கியக் கொள்கை ஆகும்” என தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

மது ஒழிப்பு குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதி சொன்ன கருத்துப் பரவலானது. பொது நல மனு மீதான விசாரணை ஒன்றில் நீதிபதிகள், ‘வருவாய்க்காக அரசு டாஸ்மாக்கை மட்டும் நம்பாமல் வேறு பல வழிகள் உள்ளது. அதில் கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மது ஒழிப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மாநில மீன்வளத்துறை அமைச்சர் பதிலளித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “மதுவை தமிழகத்துக்குள் கொண்டு வந்ததே திமுக-தான். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அதிமுக அரசு மதுவிலக்கு கொண்டு வந்த போது கள்ளச்சாரயம் பெருகி உயிரிழப்புகள் அதிகரிக்கவே மீண்டும் டாஸ்மாக் கொண்டு வரப்பட்டது.

அதனால், அதிமுக அரசின் முதன்மைக் கொள்கையே மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான். படிப்படியாகத் தமிழகத்தில் மது இல்லாத காலம் உருவாகும். தமிழ்நாட்டில் வேண்டுமென்றே யாரும் மதுவைத் திணிக்கவில்லை. குடிகாரராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் மதுவை ஒழிக்க முடியாது. மது இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் ஆசை” என்றார்.

மேலும் பார்க்க: தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியுமா? சவால் விட்ட விஷால்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: