ரஜினிகாந்த் திமுகவை நினைத்து பேசியிருக்கலாம்; அதிமுகவை அல்ல: அமைச்சர் ஜெயக்குமார் 

”2021ல் அதிமுக கொடி பறக்கும். மக்களுடன் ஒன்றி இருக்கும் போது எங்களை பிரிக்க முடியாது”

ரஜினிகாந்த் திமுகவை நினைத்து பேசியிருக்கலாம்; அதிமுகவை அல்ல: அமைச்சர் ஜெயக்குமார் 
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
ரஜினிகாந்த் திமுகவை மனதில் நினைத்து பேசியிருக்கலாம்; அதிமுகவை நினைத்து பேசியிருக்க மாட்டார். தமிழகத்தில் யார் குபேர அதிபதி என்று மக்களுக்கு தெரியும், ஆசியாவிலேயே பணக்கார குடும்பம், திமுக குடும்பம் தான் என்பது உலகம் அறிந்த விசயம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,              “ரஜினிகாந்த் திமுகவை மனதில் நினைத்து பேசியிருக்கலாம். அதிமுகவை நினைத்து பேசியிருக்க மாட்டார். தமிழகத்தில் யார் குபேர அதிபதி என்று மக்களுக்கு தெரியும். ஆசியாவிலேயே பணக்கார குடும்பம் திமுக குடும்பம் தான் என்பது உலகம் அறிந்த விசயம்.

ஆரம்ப நிலையில் கொள்கை பற்றி ரஜினிகாந்த் சொல்லி உள்ளார். அரசியலுக்கு அவர் வந்து விமர்சனங்கள் வைக்கும் போது இது குறித்து பதில் தரப்படும்” என்றார்.


அதனைத் தொடர்ந்து பேசியவர், “மாற்றங்கள் குறித்து ரஜினி கருத்து பேசலாம். திமுக பொறுத்தவரை மூடுவிழா நடத்தப்படும், செயலிழந்த நிறுவனமாக திமுக உள்ளது. செயல்படுகின்ற அமைப்பு கட்சியாக மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சியாக அதிமுக உள்ளது” என்றும் கூறினார்.

மேலும், ஜெயலலிதா அறிவித்திருந்த மக்கள் திட்டங்களை நிதி நெருக்கடி இருந்தாலும் சமாளித்து மக்களின் எண்ணங்களை ஈடு செய்யும் வகையில் செயலாற்றி வருகிறோம் என்றும் தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார் என்றும் அவர் கூறினார்.

”2021-ல் அதிமுக கொடி பறக்கும். மக்களுடன் ஒன்றி இருக்கும் போது எங்களை பிரிக்க முடியாது. ஆண்ட கட்சி மீண்டும் ஆண்டதாக வரலாறு கிடையாது. ஆனால் அதற்கு ஒரே விதிவிலக்கு அதிமுகதான்” என்று கூறினார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading