திருமாவளவன் கைது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

திருமாவளவன் கைது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் கைது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதியதாக கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடிகளுக்கான இடஒதுக்கீடு ஆணை மற்றும் சென்னை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 15 விசை படகுகளுக்கு செயற்கைகோள் தொலைபேசியை மீனவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘செயற்கைகோள் போனை பயன்படுத்தி கடலில் மீனவர்களின் இடத்தை உடனடியாக கண்டுபிடித்துவிடலாம். இதற்கு ரூ.1 லட்சம் செலவாகும் நிலையில் டில்லியில் அனுமதி பெற்று ரூ.25 ஆயிரம் மானியத்துடன் மீனவர்களுக்கு இந்த செயற்கைகோள் போன் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் ரூ.250 கோடி மதிப்பில் திருவொற்றியூரில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு தரத்தில் கட்டப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்பு மீனவர்களுக்கு இருவர் இருக்கும் குடும்பத்திற்கு ரூ.14 ஆயிரமும், 4 பேர் இருக்கும் குடும்பத்திற்கு ரூ.24 ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது. மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை தடுக்க மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று இதனை தடுப்போம். மீனவர் தொடர்ந்து தாக்கப்படுவதை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது.


மருத்துவ இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்கள் ஆலோசனைக்கு பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இட ஒதுக்கீடு விவகாரத்தில் வலிமையான சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டுள்ளது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக்கப்படும். தமிழக முதல்வரும், ஆளுநரை சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த சட்ட அமலுக்குபின் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள். இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டமன்றத்திலே தி.மு.க தூங்கிவிட்டது. வேறு எந்த செயலையும் திமுக செய்யவில்லை. இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவிற்கு புகழ் கிடைக்க கூடாது என்பதற்கான வேலைகளில் திமுக செயல்பட்டு வருகிறது. திமுக எண்ணம் எப்போதும் நிறைவேறாது.

அதிமுகவினருக்கு அதிகாரம் என்றும் முக்கியமில்லை. தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம். ஆனால் திமுகவிற்கு அதிகாரமும், அதனால் கிடைக்கும் பணமும் தான் அவர்களுக்கு முக்கியமாக உள்ளது. தமிழர்களின் அழிவிற்கு அன்று காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திமுக செயல்பட்டது. தமிழகத்திற்கு மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக எந்த நல்ல விஷயங்களையும் செய்யவில்லை.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். திருமாவளவன் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. புகாருக்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். பாஜக மட்டுமல்ல எந்த கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். திருமாவளவன் கைது தொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.தமிழகத்தில் மக்கள் நலன் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது ஆகிய 2 பணிகள் மட்டுமே அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை செய்வதற்கு யார் மீதும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. அனைத்து கட்சியிலும் உள்கட்சி பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அதிமுகவில் எந்த உள்கட்சி பிரச்சனையும் இல்லை. 2021 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்திலே அனைவரும் ஒற்றுமையாக உறுதியாக பணியாற்றி வருகிறோம். 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என உறுதியாக கூறி கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading