• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எங்கள் கூட்டணியை யாராலும் கலைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

எங்கள் கூட்டணியை யாராலும் கலைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுக சக்திகளை கலையடுக்க வேண்டும் அதனால் கூட்டணியில் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசின் ஈராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் அமைச்சர். ஜெயக்குமார்

”இது மக்களுக்கான அரசு, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் அரசு, பாமக ஒப்பந்தத்தில் இடைத்தேர்தல் குறித்து பேசப்பட்டிருக்கிறது

கூட்டணியை கலைக்க வேண்டும் என யார் எப்படி முயன்றாலும் ஒருமித்த கருத்தோடு தேர்தலை எதிர்கொண்டு மகத்தான வெற்றி பெறுவோம்” என்று அவர் கூறினார்.

1967 -ல் அண்ணா கருத்து ஒற்றுமை இல்லை என்றால் கூட சுதந்திரா கட்சியை கூட்டணியில் சேர்த்து தேர்தல் களம் கண்டது. கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்தது. “தேர்தல் கூட்டணி வேறு, கட்சி கொள்கை வேறு”

தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுக சக்திகளை கலையடுக்க வேண்டும் அதனால் கூட்டணியில் ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம்.

”அதிமுக - தேமுதிக கூட்டணி அமையக்கூடாது என பலர் முயற்சிக்கிறார்கள், ஆனால் அது நடக்காது
நாங்கள் நினைப்பது மட்டுமே நடக்கும்”

சிவகாசியில் கட்சி நிகழ்ச்சியில் தேமுதிக குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலஜி தெரிவித்தது அவரின் தனிபட்ட கருத்து, அது கட்சி கருத்து இல்லை என்று அமைச்சர். ஜெயக்குமார் பேசினார்.

Also Watch: தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் கவலையில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: