பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: ஜெயக்குமார்!

காவிரியில் இருந்து 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

news18
Updated: June 14, 2019, 5:27 PM IST
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: ஜெயக்குமார்!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
news18
Updated: June 14, 2019, 5:27 PM IST
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள கங்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில கலந்துகொண்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், தமிழக ரயில் நிலையங்களில் தமிழ் மொழிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால் அதிமுக தமிழ் மொழியை காக்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் எதிர்பார்த்த 100 சதவீத மழையில் 40 சதவீதமாக கிடைக்க பெற்று உள்ளது. 60 சதவீத மழை இல்லாத போதும் வறட்சியை வெற்றிகரமாக சமளிக்கக் கூடிய வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார். சென்னையில் 60 லட்சம் பேர் உள்ளனர். மேலும் 20 லட்சம் பேர் தினமும் வந்து செல்பவர்கள். தினமும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

சென்னையில் 9,000 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. நெமிலியில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதன் முலம் தென்சென்னை முழுவதும் தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்றும் ஜெயக்குமார் உறுதியளித்தார்.

மேட்டூரில் இருந்து 1 டி.எம்.சி. தண்ணீரை விராணத்தில் நிரம்பும் போது நவம்பர் வரை தண்ணீர் கிடைக்கும். செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் பகுதிகளில் தண்ணீர் இல்லை. பூண்டியில் 55 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

துரிதமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மக்கள் நீண்ட தூரம் அலைக்கூடாது என்பதால் சிறிய லாரிகள் முலமாக தண்ணீர் வழங்கப்படுகிறது.
Loading...
இயற்கை கைவிட்ட நிலையில் பொதுமக்கள் உணர்ந்து குடிநீரை விரையம் ஆக்காமல் சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அது மீண்டும் ஒலித்துக் கொண்டு இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும். சென்னையில் 9,000 லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதால் நீர் நிரப்பும் நிலையங்களில் நீண்ட கியூ உள்ளது. 1 மணி நேரம் தாமதம் ஆனாலும் தண்ணீரை மக்களுக்கு சப்ளை செய்யப்படும்.

விளைநிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால் குற்றமாகும். அவ்வாறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

Also see...

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...