வேதியியல் தேர்வில் 5 மதிப்பெண் தான் பெற்றேன் - மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பயன்படுத்தப்பட்ட 50 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

வேதியியல் தேர்வில் 5 மதிப்பெண் தான் பெற்றேன் - மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
சென்னை பாரிமுனையில் கொரோனா தொற்றை கண்டறியும் தனியார் கொரோனா பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்த பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். தேர்ச்சி பெறாதவர்கள் வருத்தம் அடைய வேண்டாம்.

நான் 9-ம் வகுப்பு படித்தபோது வேதியியலில் 5 மதிப்பெண் மட்டும் தான் பெற்றேன். பின் வைராக்கியத்துடன் படித்து தேர்வில் 80 சதவிகிதத்துக்கு மேல் எடுத்தேன். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. வைராக்கியத்துடன் படித்து அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


Also read... நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி எழுதிய கடிதத்திற்கு பதில் வரவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தொடங்கிவிட்டதாக அவர் கூறிய கருத்து குறித்து கேட்ட போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பயன்படுத்தப்பட்ட 50 தோட்டாக்கள் மற்றும் மேலும் 1 கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த தோட்டாக்களை அவர் எதற்கு பயன்படுத்தினார் என்பது கூட தெரியவில்லை. இவரிடம் மட்டும் தான் கள்ளத்துப்பாக்கி உள்ளதா,  இல்லை மேலும் எத்தனை திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கள்ளத்துப்பாக்கிகள் இருக்கிறது என தெரியவில்லை என பதில் அளித்தார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading