Home /News /tamil-nadu /

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது: அமைச்சர் விளக்கம்!

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது: அமைச்சர் விளக்கம்!

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ப.சிதம்பரம்

அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியினர் வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும் என்று கூறிய ஜெயக்குமார், மத்தியில் அங்கம் வகித்த திமுகவினர் தமிழினத்தை அழித்ததை அவர்கள் மறந்து விட்டனரா என்றும் கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டு 100% உண்மைக்கு மாறானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்காக பிரத்யேக பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், மத்திய அரசின் கைப்பாவையாகவே அதிமுக அரசு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் தொலைப்பேசி வாயிலாக இணைந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டு 100% உண்மைக்கு மாறானது என்று தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியினர் வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும் என்று கூறிய ஜெயக்குமார், மத்தியில் அங்கம் வகித்த திமுகவினர் தமிழினத்தை அழித்ததை அவர்கள் மறந்துவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பினார்.

    தேமுதிக, பாமக பலவீனமாகிவிட்ட அமைப்புகள். அதிமுக கூட்டணி தேர்தல் தப்பு கணக்கு போட்டுள்ளது என்றும் ப.சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு பதிலளித்த ஜெயக்குமார், இவர் எப்போது கணக்கு டீச்சர் ஆனார் என்று கிண்டலாக கூறினார்.

    மேலும், தற்போது பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அதிமுக எம்ஜிஆர் கண்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இல்லை என்றும் இது ஜெயலலிதா கண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இல்லை என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எந்த ஆதாரங்களை வைத்து ப.சிதம்பரம் இவ்வாறு கூறுகிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த பாதையில் ஒரு அடி கூட பிறலாமளே அதிமுக தற்போது ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Minister Jayakumar, P.chidambaram, Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி